ஆபத்தான காலநிலை -மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஆபத்தான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடைமழை மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்தவரும் 24 மணி நேரத்தில் சுமார் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது. இதன்போது பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இடர்காப்பு மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய நுவரெலியா, இரத்தினபுரி , களுத்துறை , கேகாலை மாவட்டங்களுக்கு உட்பட்ட அம்பகமுவ, புலத்சிங்கள, கிரியெல்ல, கடலவன, வரக்காபொல, மத்துகம ஆகிய பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor