தெலுங்கான முதல்வரின் நாய் மரணம் – வைத்தியர்கள் மீது வழக்கு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் உயிரிந்தததை அடுத்து, அதற்கு சிகிச்சை அளித்த இரு கால்நடை வைத்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் உள்ள முதல்வர் சந்திரசேகர் ராவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சில நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன, இதில் ஒரு நாய்க்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த நாய்க்கு தனியார் கால்நடை வைத்தியசாலையை சேர்ந்த இரு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அந்த நாய் கடந்த 12 ஆம் திகதி இறந்துவிட்டது.

இது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், அந்த இரு வைத்தியர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். விலங்குகளை கொடுமைப்படுத்துதல், விலங்குகளை வேண்டுமென்றே கொலை செய்வது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்