கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

கடும் மழை காரணமாக, நாட்டில் உள்ள பல கங்கைகளின் நீர்மட்டமானது, எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதாக நீர்பாசனவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மற்றும் மில்லகந்த ஆகிய பிரதேசங்களில் களு கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிரித்துள்ளது.

நோர்வூட் பிரதேசத்தில் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், நாவலப்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தனகல ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்பாசனவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று (16) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்