மோடியை மிரட்டும் பாகிஸ்தான் பாடகி!!

காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்ல வேண்டுமென கூறி பிரபல பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளமான டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியை தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் பதிவேற்றியுள்ளார்.

அந்த காணொளியில் கை நிறைய விஷ பாம்புகளை ரபி பிர்ஸாடா வைத்துள்ளதுடன் தரையில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும்  உள்ளன.

இவைகளுடன் விளையாடும் அவர், “ நீங்கள் காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள். இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. ஆகையால் இறப்பதற்கு தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

குறித்த காணொளியை பார்வையிடும் மக்கள் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி அதனை வைரலாக்கி வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் திகதி நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் அரசு கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே குறித்த பாடகி ரபி பிர்ஸாடா, மோடிக்கு  எதிராக காணொளியை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor