மெக்ஸிக்கோவில் கிணற்றிலிருந்து 44 உடல்கள் கண்டெடுப்பு!!

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்களில் 44 பேரின் உடல்களை தடயவியல் வல்லுநர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அதன் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் முறைப்பாடு அளித்தனர்.

இதற்கமைய அந்த கிணற்றை சோதனை இட்டதிலிருந்து மனித உடல்களின் சிதிலங்கள் 119 கறுப்புப் பையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த மனித உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவியது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், உடல் பாகங்களை அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் அனுப்புமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

அதற்கமைய அங்கு சென்ற நிபுணர்கள் 44 பேரின் உடல்களை அடையாளம் கண்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையிலான சண்டையில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் குறித்த கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor