நாளை இலங்கை வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30 ஆம் திகதி 2 வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைத்தீவுக்கு இன்று விஜயம் செய்த அவர் நாளை, இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

பிரதமர் மோடியின் இலங்கைக்கான மூன்றாவது விஜயமாக இது அமையவுள்ளது.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் காரணமாக கொழும்பு நகரில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


Recommended For You

About the Author: Editor