கம்பஹா, கொழும்பு மாவட்ட மக்கள் அவதானம்!

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்குட்பட்ட பல பிரதேசங்களில் பொய்யான தகவல்களைக் கூறி சிலர் நிதி சேகரித்து வருவதால், மக்கள் இது தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி கூறி, இவ்வாறு பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ளும்படி, பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

கம்பஹா மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா, நிட்டம்புவ, மீரிகம, திவுலப்பிட்டிய ஆகிய பகுதிகளிலும், கொழும்பின் சில பகுதிகளிலும் இவ்வாறு நிதி திரட்டும் வேலைகளில் பலர் இறங்கியுள்ளதாக பொலிஸாரால் இப்பிரதேச மக்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நிதி கேட்டு வருபவர்கள் தொடர்பில் பொது மக்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறு பொலிஸாரினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறு வெளிப் பிரதேசங்களிலிருந்து எவ்விதமான ஆவணங்களும், ஆதாரங்களுமின்றி பெருந்தொகையான பணத்தொகையினைச் சேகரித்துச் செல்வதாக அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு சிலர் பொய்யான நிதி சேகரிப்பில் ஈடுபடுவதினால், உண்மையாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர்
சங்கடத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாக, இப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor