தெமடகொடயில் வெடிப்புச் சம்பவம்!!

தெமடகொடயில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்

தெமடகொட மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இலங்கை நேரப்படி இன்று காலை 8.45 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு சிலிண்டர் ஒன்று தீப்பற்றியமை காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது அருகில் இருந்த இரண்டு வீடுகள் உள்ளடங்களாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor