பயிற்சியில் நடனமாடிய இந்திய , அமெரிக்க இராணுவம்

இந்திய- அமெரிக்க இராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சியின் இடையே பாட்டுப் பாடி நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வொஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்சோர்ட் விமானப்படைத் தளத்தில் இந்திய- அமெரிக்க இராணுவத்தினர் ‘யூத் அப்யாஸ்’ என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஒத்திகை பயிற்சியில் இந்தியா- அமெரிக்கா இராணுவப்படைகள் இணைந்து பாதுகாப்பு குறித்த பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒத்திகையின் போது, இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவப்படையினர் அசாம் இராணுவப் படையின் பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இருநாட்டு இராணுவ வீரர்களும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே நடனம் ஆடுவது போல காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்