கல்முனை நகரம் புளுதியில் மறைந்தது!

கல்முனை நகரில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக நகரம் முழுவதும் தூசியால் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வீசிய கடும் காற்றினால் அங்கிருந்த பெரிய கட்டடங்களின் பதாதைகள் உடைந்து விழுந்துள்ளன.

நகரின் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அதிக தூசி மற்றும் மணல் காரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் வீதியில் பயணித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரம் முழுவதும் தூசியால் மறைந்த நிலையில் 15 நிமிடங்கள் வரை இந்த நிலைமை நீடித்துள்ளது. குறித்த 15 நிமிடமும் நகரமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பலர் தங்கள் கடைகளை மூட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலைமையினால் பீதியடைந்த நகர மக்கள் பாதுகாப்பான இடம்நோக்கி ஓடியதாக கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor