பெயர் மாறுகிறது பலாலி விமான நிலையம்!

புனரமைப்பு பணிகளின் பின்னர் அடுத்த மாதம் முதல் பிராந்திய விமானசேவைகளை ஆரம்பிக்கவுள்ள பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண விமான நிலையம் என பெயரிடப்படவுள்ளது.

தி.மு.கவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான தமிழக பிரதிநிதிகளிடம், பிரதமர் ரணில் நேற்று இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மகளின் திருமணத்திற்காக இலங்கை வந்திருந்த கனிமொழி மற்றும் இந்திய பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர்.

இதன்போதே பிரதமர் இந்த தகவலை தெரிவித்தார். அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் நான்கு விமான நிலையங்களிற்கு சேவை இடம்பெறுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான கப்பல் சேவையின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor