அதிபர் வேட்பாளரை தீர்மானிக்க கூட்டமைப்புக்கும் அழைப்பு?

“தமது ஆதரவை வழங்குவதற்கு, சஜித் பிரேமதாச தமக்கு எழுத்து மூலம் வாக்குறுதி தர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருந்த சஜித் பிரேமதாச, தாம் ஆட்சிக்கு வந்தால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்திருந்தார்” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், எல்லா வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வைத் தருவதாக எழுத்து மூல உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இன்னமும் யாருக்கு ஆதரவளிப்பதென முடிவு செய்யவில்லை என்றும், அவர்கள் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தீர்மானிக்க நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor