
யாழ்ப்பாணம், அரியாலை நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிரக்டர் வாகனம் மீது விசேட அதிரடிப் படையினர் (சனிக்கிழமை) மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கி.ரஜீவன் (வயது-20) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியாலை பகுதியில் டிரக்டர் வாகனத்தில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்றபோது விசேட அதிரடிப் படையினர் மறித்த போதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் குறித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.