‘காப்பான்’ இரண்டாவது டிரெய்லர் வெளியீடு!!

லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) இரவு 7.00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் இரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை அடுத்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் வரும் 20ஆம் திகதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor