கிளியில் இரண்டு மாதிரி கிராமங்கள் திறந்து வைப்பு!!

கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதிநகர், சஞ்சீவிநகர் மாதிரி கிராமம் இன்று (07.06.19) வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்ப அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் ஆகிய மாதிரி கிராமங்களில் 32 வீடுகள் தலா ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு 32 பயனாளிகளிற்கான காணி உரிமங்களும் கையளிக்கப்பட்டன.

மேலும் கிளிநொச்சிமாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு 50 ஆயிரம், ஒரு லட்சம்,இரண்டு லட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன. அத்துடன் 7.5 லட்சம் பெறுமதியான வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு முதல்கட்ட காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது

குறி்த நிகழ்வில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா.ம உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor