மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஐதேக!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவின் கீழ் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அரசிதழ் ஆணையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 10ஆம் நாள் வெளியிட்டிருந்தார்.

இதற்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கமும், ஊடக சுதந்திர அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.


Recommended For You

About the Author: Editor