பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த அவலம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் இருவரை கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர், பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் எனவும், அவர் கொழும்பு, கறுவாத்தோட்டம் பொலிஸ் குடியிருப்பில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor