மைத்திரி – ரணில் – கனிமொழி ஹக்கீம் திருமண வீட்டில்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் உட்பட பல்வேறு அரசியல், ஆன்மீக தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அவர்களுடன் குறிப்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும், கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே.நவாஸ்கனி, முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத்,இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்ர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக இலங்கை வந்துள்ள மேற்படி அரசியல் பிரமுகர்கள் பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட அரசியல் தலைமகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor