யுவதி ஒருவர் ரயிலில் மோதுண்ட உயிரிழப்பு!

கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்ட யுவதியொருவர்

உயிரிழந்துள்ளார்.இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அரலகங்வில- புபுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor