சாதனைகளை வசமாக்கி வரும் ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை படைந்துள்ளார்.

சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணித்தலைவர் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றிய அவர், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் விளையாடியுள்ள 10 இன்னிங்சில் மாத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 239, 76, 102, 83, 144, 142, 92, 211, 82, 80 ஓட்டங்களை விளாசியுள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்