தமிழகத்தில் கட்டவுட் வைக்க தடை

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, உள்ளுராட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பெனர்கள் வைக்கக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் குறித்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவு உள்ளடங்கிய சுற்றரிக்கையை அனைத்து ஆட்சியர் அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அ.தி.மு.க கட்சியினர் நிறுவிய பெனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு மக்கள் கடுமையான எதிர்பினை வெளியிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சம்வம் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, டிஜிட்டல் பெனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி உள்ளுராட்சி அமைப்புகளில் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடை பாதைகளில் டிஜிட்டல் பெனர்கள் நிறுவ தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பெனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்