பொன்னாலை மக்களை பழிவாங்ககும் அரசியல்வாதிகள்!!

17 வருடங்கள் உயா்பாதுகாப்பு வலயமாக இருந்த பொன்னாலை கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு கம்பரெலிய என்ற வரப்பிரசாதம் அரசியல் காழ்ப்புணா்ச்சிகளினால் கிடைக்கவில்லை.

என பிரதேசசபை உறுப்பினா் நல்லதம்பி பொன்ராசா குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், வட்டுக்கோட்டை தோ்தல் தொகுதியில் ஏற்கனவே போக்குவரத்துச் செய்வதற்கு ஏற்றதாக இருக்கின்ற வீதிகள் கூட கம்பரெலிய திட்டத்தின் கீழ், அதிக நிதியில் மீள் புனரமைப்புச் செய்யப்படுகின்றன.

ஆனால், 17 வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பொன்னாலையில் மக்கள் மீள்குடியேறிய இடங்களில் மக்கள் இப்போதும் மண் மற்றும் முருகைக் கற்களைப் பயன்படுத்தி வீதியைப் புனரமை செய்கின்ற நிலமை மிகவும் வேதனையளிக்கின்றது.

இதற்கு காரணம் அமைச்சரினதும் எம்.பியினதும் அரசியல் பாரபட்சம்?


Recommended For You

About the Author: Editor