
கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்த சோதனை ஓட்டத்திற்கு பின்னர், தற்போது மீண்டும் இந்த மிதக்கும் மகிழுந்து சோதனைக்கு வர உள்ளது.
செப்டம்பர் 16 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை சென் நதியில் இந்த மிதக்கும் மகிழுந்தை நீங்கள் காணலாம். பரிஸ் போக்குவரத்து துறையில் இது ஒரு புரட்சி எனவும், எதிர்காலத்தில் மிக தேவையானதாக இருக்கும் ஒன்று எனவும் இவ்வகை மிதக்கும் மகிழுந்துகள் குறிப்பிடப்படுகின்றன.
Ports de Paris இல் இருந்து இந்த மிதக்கும் மகிழுந்துகள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கின்றன. மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது இது.
காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும், பின்னர் மாலை 3 மணியில்னிருந்து 5 மணி வரையும் இந்த மகிழுந்துகள் சேவையில் இருக்கும். இம்முறையும் சோதனை முயற்சி வெற்றியளித்தால், 2020 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இந்த மிதக்கும் மகிழுந்துகள் சேவைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.