பாப்பரசர் பிரான்சிஸ் ஜப்பான், தாய்லாந்துக்கு பயணம்!

பாப்பரசர் பிரான்சிஸ் ஜப்பான் மற்றும் தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன் படி நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாப்பரசர் பிரான்சிஸ் ஜப்பானுக்கு செல்லவுள்ளார்.

நவம்பர் மாதம் 20 முதல் 23 ஆம் திகதிகளில் அவர் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி மற்றும் டோக்கியோவுக்கு விஜயத்தை மேற்கொள்வார் என்று தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

1981 இற்குப் பிறகு ஜப்பானுக்கு செல்லும் முதல் பாப்பரசர் பயணமாக பிரான்சிஸின் பயணம் அமையவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானுக்கு கடைசியாக சென்ற பாப்பரசர் 1981இல் மறைந்த புனித பாப்பரசர் இரண்டாம் ஜான்போல் என்பவரே ஆவார்.

இதேவேளை, ஜப்பானுக்கு பயணம் செய்வதற்கு முன்னர் பாப்பரசர் பிரான்சிஸ் தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தை நவம்பர் 19 பாப்பரசர் மேற்கொள்ளவுள்ளார்.

தனது தாய்லாந்து பயணத்தின் போது, ​​பிரான்சிஸ் மத விழாக்களில் தலைமை தாங்கவுள்ளதோடு கத்தோலிக்க சமூகங்களிடையே சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளார்.

1984 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு விஜயம் செய்த கடைசி பாப்பரசராக இரண்டாம் ஜான் போல் உள்ள நிலையில் அதன் பின்னர் பாப்பரசர் பிரான்சிஸின் பயணம் அமையவுள்ளது.

அத்துடன் தென்கொரியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மியான்மார் மற்றும் பங்களாதேஷுக்கு விஜயம் செய்த பிரான்சிஸின் ஆசியாவிற்கான நான்காவது பயணமாகவும் இது காணப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor