இலங்கை சார்பாக தடம்பதிக்கும் யாழ் வீராங்கனை!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் ஆரமமாகவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பெறவுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்ஷிகா தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார்.

ஆர்ஷிகாவிற்கு அவரது தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டிகளில் ஆர்ஷிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் ஆர்ஷிகா தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

அந்தவகையில் கனிஷ்ட பிரிவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும், சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி, 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார்.

அத்துடன் அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் ஆர்ஷிகா வெற்றியீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor