ஜனாதிபதியை எச்சரிக்கும் சுமந்திரன்!!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற தொிவு குழுவின் எதிா்காலத்தை தீா்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா்.

குறித்த தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலை. அது நிறைவேற்று அதிகாரத்தின் வேலையல்ல. எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும்”

அனைத்து அமைச்சர்களையும் உடன் அமைச்சரவை கூட்டத்திற்கு வருமாறு நேற்று அழைப்பு விடுத்த ஜனாதிபதி, குறித்த தெரிவுக்குழுவில் உள்ள ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுவதாகவும்

ஜனாதிபதி தெரிவித்தார். அண்மைய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் தெரிவுக்குழுவிற்கு புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினால் இனிமேல் அமைச்சரவை கூட்டத்தில் தான்

பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor