வெற்றிகரமாக செயற்கை கோள்களை ஏவியது சீனா!

சீனா மூன்று புதிய செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சீன விண்வெளி தொழில்நுட்ப கழகம் தயாரித்த இசட்ஒய்-1 02டி என்ற வளங்களை ஆராயும் செயற்கைக்கோள் நேற்று(வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்பட்டது.

இது சீனாவின் வடக்கு பகுதியிலுள்ள சான்ஷி மாகாணத்தின் தையுவான் விண்வெளி மையத்தில் இருந்து, லாங்மார்ச் 4 பி ரொக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது.

பீஜிங் பல்கலைக் கழகம் தயாரித்த 16 கிலோ எடை கொண்ட பிஎன்யூ-1, ஷாங்காய் தனியார் விண்வெளி தொழில்நுட்ப கல்லூரி தயாரித்தது உள்ளிட்ட இரண்டு சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

இது பூமியில் இருந்து 778 கிமீ உயரத்தில் சூரிய சுற்று வட்டப்பாதையில் இயங்கும்.

இதில் அமைக்கப்பட்டுள்ள புற ஊதா கதிர்கள் கேமரா 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய மற்றும் சிறிய நகரங்களை மிகத் துல்லியமாக ஒளிப்படமெடுக்கும் வசதி கொண்டவை.

இதன் மூலம் நகர மேம்பாடு, உள்கட்டமைப்பை மிக சிறந்த முறையில் திட்டமிடலாம்.

இதில் நிறுவப்பட்டுள்ள 166 அலை வரிசை கொண்ட அதிநவீன கமரா ஒரே நேரத்தில் பல்வேறு நிறங்களில் 166 ஒளிப்படங்களை எடுக்கும் திறன் மிக்கவை என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் உள்ள கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள், சுற்று சூழல், பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர் ஆகியவற்றை இந்த செயற்கைகோள் கண்காணிக்கும்.


Recommended For You

About the Author: Editor