உலக பல்கலைக் கழக கணிப்பீட்டில் இங்கிலாந்திற்கு முதலிடம்!

உலகளாவிய ரீதியில் சிறந்த பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக் கழகத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகம் தொடர்ந்து 4வது ஆண்டாகவும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் 3வது இடத்தையும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் 4வது இடத்தையும், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன், பிரின்செடன் பல்கலைக் கழகம் 6வது இடத்தையும், ஹாவார்ட் பல்கலைக்கழகம் 7வது இடத்தையும், யேல் பல்கலைக் கழகம் 8வது இடத்தினையும், சிகாகோ பல்கலைக்கழகம் 9வது இடத்தினையும், லண்டன் இம்பீரியல் கல்லூரி 10வது இடத்தையும் பிடித்துள்ளன.


Recommended For You

About the Author: Editor