ரணில் விக்கிரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறாரா!!

இலங்கை அரசியல் அரங்கில் பல்வேறு பதவிகளை வகித்த தான், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் பியகம, களனி தேர்தல் தொகுதிகளின் ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரை, பிரதமர் சந்தித்து உரையாற்றியப்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியை பாதுகாப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டேன்.

அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியை வெற்றிப் பாதையோ நோக்கி கொண்டுச் செல்வதற்கு என்னால் முடிந்த செயற்பாடுகளை நிச்சயம் மேற்கொள்வேன்.

மாறாக தோல்வியடைந்தால் கட்சியிலிருந்து வெளியேறுவதாயினும் அதற்கும் தயார்.

அதாவது எனது வாழ்க்கையில், இதுவரைக்காலமும் பல்வேறு பதவிகளை வகித்து விட்டேன். ஆகையால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதிலும் எவ்வித பிரச்சினையும் கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor