தண்ணீர் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு

கே2-18பி என்ற கிரகத்தில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே, பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கிரகம் விண்மீன் ஒன்றை சுற்றிக் கொண்டிருக்கிறது.

இது பூமியை விட 8 மடங்கு பெரியது. இந்த கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா மையத்தின் ‘ஹப்பிள்’ விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து வந்தன.

இதன்போது குறித்த கிரகத்தில் நீராவி மூலக்கூறுகள், ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றில் நைட்ரஜன், மீத்தேன் மூலக்கூறுகளும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இங்குள்ள மேகக் கூட்டம், நீரின் அளவை கண்டறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி,

”பூமியை தவிர, உயிர் வாழக்கூடிய வகையில் உள்ள இன்னொரு கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது. கே2-18பி இன்னொரு பூமி அல்ல. அது வித்தியாசமான சுற்றுச்சூழலுடன் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்