
மத்திய பிரதேசம் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கட்லாபூர் காட் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த படகில் பயணம் செய்த 11 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது