நாட்டின் பல பாகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான சீரற்ற கால­நிலை எதிர்­வரும் சில தினங்­க­ளுக்கு தொடரும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

குறிப்பாக குரு­ணாகல், மாத்­தளை, கம்­பஹா, கேகாலை, கண்டி, நுவ­ரெ­லியா, கொழும்பு, களுத்­துறை, இரத்­தி­ன­புரி, காலி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்