முன்னேஸ்வர இரதோற்சவம்

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி தேவஸ்தான இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகின்ற முன்னேஸ்வரம் ஆலய மகோற்சவம் கடந்த மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இன்று காலை நடைபெற்ற வசந்த மண்டபப் பூசைகளை அடுத்து பஞ்ச மூர்த்திகளும் சித்திரத் தேர்களில் வலம் வந்து அருள்பாளித்தனர்.

உற்சவத்தில், பஞ்சமூர்த்திகள் உள்வீதி வலம் வந்ததுடன், தொடர்ந்து இரதங்களில் வெளிவீதி பவனி வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தனர். இரதோற்சவ நிகழ்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor