திடீரென பற்றி எரிந்த சொகுசு வாகனம்!

யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான சொகுசு வாகனமே இவ்வாறு திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

எனினும் அவ்வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர். இதன் காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மேலும் இவ்விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor