சேரனை மிரட்டும் மகள்

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் கடந்த இரண்டு நாட்களாக வருகை தந்து நிகழ்ச்சியை சுவராஸ்யம் ஆக்கிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று தர்ஷனின் அம்மாவும் தங்கையும் வந்தனர்.

அதேபோல் வனிதாவின் இரண்டு மகள்களும் வந்ததால் பிக்பாஸ் வீடு குதூகலமாக இருந்தது

இந்த நிலையில் அடுத்ததாக சேரன் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டில் வந்திருக்கின்றனர். பொதுவாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரும்போது வெளியில் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கூறி அவர்களுக்கு ஆலோசனை கூறுவது வழக்கம்.

அந்த வகையில் சேரனின் மகள் சேரனுக்கு சில ஆலோசனைகளை கூறுகிறார்

‘பொண்ணு பொண்ணு’ என்ற பெயருக்கு சொன்னால் உடனே உண்மையான அன்பு கிடைத்துவிடுமா? என்றும் சேரன் மகள் கூற அதற்கு சேரன் ’அப்படி எல்லாம் கிடையாது விட்டுக் கொடுத்துப் போவது நல்லது தான்’ என்று கூறுகிறார்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேரனின் மகள் ’விட்டுக்கொடுத்து போகவேண்டும்’ என்று இனி பேச வேண்டாம்  நீங்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவள் பின்னால் சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றாள்.

எனவே தான் உங்களுக்கு வெளியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று கூறுகிறார் அதற்கு சேரன் சரி சரி என்று கூறியும் சமாதானம் ஆகாத சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஐந்து பேர்களிடம் மட்டும் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்.

அந்த இருவரிடமும் பேச வேண்டாம் என கவின், லாஸ்லியா ஆகியோர்களை குறிப்பிடுகிறார். கடைசியாக இனிமேல் நீங்கள் லாஸ்லியாவை மகள் என்று கூறினால் நான் டென்ஷன் ஆயிருவேன்’ என்று மிரட்டுகிறார்

ஏற்கனவே நேற்று லாஸ்லியாவின் தந்தை ‘விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாரு, எந்த உறவு முறையும் வேண்டாம்’ என்று கூறியிருக்க, இன்று சேரனின் மகள் ‘லாஸ்லியாவிடம் இனி பேசாதே’ என்று கூறியிருப்பதால் இனிவரும் மூன்று வாரங்களும் இருவரது உறவு எதை நோக்கி செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor