பிக்பாஸ் வீட்டில் ‘வாயாடி பெத்த பொண்ணு’

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று தர்ஷனின் அம்மா மற்றும் சகோதரி வந்ததாக முதல் புரமோவில் பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது புரமோவில் வனிதாவின் இரண்டு குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் உறவினர்களின் வருகையின்போது நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக முகினின் தாயார் வருகையின் போதும், லாஸ்லியாவின் தந்தையார் வரும்போதும் உணர்ச்சியின் உச்சகட்டமாக காட்சிகள் இருந்தன

ஆனால் வனிதாவின் குழந்தைகள் வரும்போது வனிதா ஜாலியாக சிரித்துக் கொண்டே ’வாயாடி பெத்த பொண்ணு’ என்று கூறி அவர்களை வரவேற்று, அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி மகிழ்கிறார். மற்ற போட்டியாளர்கள் போல் வனிதா ஆரம்பத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டில் இல்லை.

சமீபத்தில் அவர் வீட்டுக்கு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்பதால் பிரிவின் தாக்கம் அவருக்கு தெரியவில்லை.  இருப்பினும் வனிதாவின் குழந்தைகளுடன் மற்ற போட்டியாளர்கள் ஆடிப்பாடி வருகின்றனர்.

இந்த வாரம் முடிய இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று மேலும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருகை தர வாய்ப்பு உள்ளது. அது சேரனின் குடும்பமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor