பாதயாத்திரைநல்லூரிலிருந்து ஆரம்பமானது!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்று, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் நடத்தப்படவுள்ளன.

நாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மேம்பட இறையருள் வேண்டியே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor