நாட்டின் பல பகுதிகளில் அதிக மழை!!

மேல், சப்ரகமுவ, வடமேல், காலி, மாத்தறை உள்ளிட்ட பல பகுதிகளில் 100 – 150 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor