ஹிந்தி சீரியலில் பிரியாமணி

பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்த பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது இணைய தொடர் மூலம் மீண்டும் வருகிறார்.

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியில் ´ஸ்ட்ரீ´, ´கோ கோவா கான்´, ´ஷார் இன் த சிட்டி´ ஆகிய படங்கள் மூலம் பாராட்டப்பட்ட இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இருவரும் இயக்குகிறார்கள்.

இந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி பேமிலி மேன்’ தொடரின் கதை ஆகும்.


Recommended For You

About the Author: ஈழவன்