அதிகரிக்கும் இளவயது திருமணங்கள் – யுனிசெப்!

உலக நாடுகளில் இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள 82 நாடுகளில் குழந்தை திருமணம் குறித்து ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தெற்கு ஆசிய நாடுகள், லத்தின் அமெரிக்கா, பசிபிக் போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 11.5 கோடி பேர் பருவநிலை அடையும் முன்னரே மணமகன்களாக மாறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு மடங்கு மணமகன்கள் 15 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக ஆபிரிக்காவில் 28 சதவீதம் பேரும், நிகரகுவாவில் 19 சதவீதம் பேரும், மடகஸ்கரில் 13 சதவீதம் பேரும் பருவ நிலை அடையும் முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த ஆய்வு குறித்து யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா ஃபோரே கூறுகையில், ‘சிறுவர்கள் விரும்பாதபோதும் கட்டாயமாக திருமணம் செய்து வைத்து குடும்பத்தை தாங்கும் பொறுப்பினை குடும்பத்தினர் கொடுக்கின்றனர்.

முன்னதாகவே திருமணம் செய்வதால், அவர்கள் விரைவிலேயேள தந்தையாகவும் மாறி விடுகிறார்கள். இதனால் குடும்ப பிரச்சனைகளை முழுவதுமாக சுமக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

மேலும் திருமணத்தால் அவர்களின் கல்வி பாதிப்படைவதோடு வேலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற திருமணங்களை குறைக்க யுனிசெப் தொடர்ந்து முயற்சி எடுக்கும். விழிப்புணர்வு ஏற்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor