உணவு ஒவ்வாமை – 26 பேர் வைத்தியசாலையில்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையால் நிர்வகிக்கப்படும் ஹட்டன்- நோர்வூட் நிவ்வெளிகம தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தில் பயிற்சி பெறும் 26 இளைஞர், யுவதிகள், இன்று  (11) திடீர் சுகயீனம் காரணமாக, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என, தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தின் அதிபர் பெஞ்சமின் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் வயிற்றோட்டம் காரணமாகவே, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு யுவதி மாத்திரம், இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றையவர்கள், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னரே, இவர்கள் சுகயீனமடைந்துள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்