மீண்டும் பிக்பாஸ் இணைந்தார் சேரன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரன், சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அவரை போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்

 

ஞாயிற்றுக்கிழமை சீக்ரெட் அறைக்கு சென்ற சேரன் , திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் மட்டுமே சீக்ரெட் அறையில் இருந்த நிலையில் இன்று அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் திரும்புவதாக முதல் புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

சேரனின் வருகையை ஏற்கனவே வனிதா உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் எதிர்பார்த்தனர் என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிய வந்தது.

கவின் லாஸ்லியா மற்றும் வனிதா ஆகிய மூவருக்கும் மூன்று கேள்விகள் சேரன் கேட்ட நிலையில் கவின் – லாஸ்லியா கேள்வியால் வனிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கவின், லாஸ்லியா சம்பவம் இன்னும் ஒளிபரப்பாகி இருக்காது, அதற்குள் சேரன் இது குறித்த கேள்வியை கேட்டுள்ளார் என்றால் அவர் சீக்ரெட் அறையில் தான் இருக்க வேண்டும் என்பதை வனிதா சரியாக யூகித்தார். அவரது கணிப்புப்படியே சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார்

சேரனின் வருகை வனிதா, ஷெரின் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கவினுக்கு நெருக்கடியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor