
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்ப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இடையிடையே நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது