எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா!

பல வருடங்களாக சந்திக்காத லாஸ்லியாவின் தந்தை இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லாஸ்லியாவை சந்தித்தது குறித்து இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் பார்த்தோம்.

அதில் லாஸ்லியாதான் உணர்ச்சி வசப்பட்டு அழுதாரே தவிர, அவருடைய தந்தை எந்தவித உணர்ச்சிகளையும் காண்பிக்காமல் இருந்ததால் அவர் லாஸ்லியா மீது கோபமாக இருக்கின்றாரோ என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகம் இன்றைய மூன்றாவது வீடியோவில் உறுதியாகிவிட்டது

இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் லாஸ்லியாவின் தந்தை, ‘என்ன சொல்லிட்டு வந்த நீ? உன்னை அப்படியா நான் வளர்த்தேன் என்று கோபமாக கேட்க, லாஸ்லியா அழுது கொண்டே அமைதியாக இருக்கின்றார். அவரை சேரன் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து செல்ல முயல்கிறார். பின் மீண்டும் ‘தலை குனிஞ்சு வாழ நான் விரும்பலை, என்ன காரணத்தை சொல்லி நீ உள்ளே வந்த!, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா… என்று கோபமாக கூறவே அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்

குறிப்பாக கவினுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய நண்பர்களும் லாஸ்லியாவின் கோபத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor