காட்டு யானை தாக்கி இருவர் பலி!

அம்பாறை – சுகதகம பகுதியில் காட்டு யானை ஒன்றின் தாக்குதலுக்குள்ளான 4 வயதான சிறுமியும் அவரது பாட்டியும் பலியாகினர்.

நேற்று மாலை 5 மணியளவில் கடையொன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் 4 வயதான சிறுமியே பலியானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதாகவும், வறட்சி காரணமாக நீரை தேடி குறித்த யானைகள் கிராமங்களை நோக்கி பிரவேசிப்பதாகவும் எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் அம்பாறை சுஹதகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor