மேன்முறையீட்டில் கோட்டாவின் மனு நிராகரிப்பு!

கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் குறித்த வழக்கு தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீடு சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய நீதிபதிகள் முன்னலையில் இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி சிசிர த ஆப்ரூ, குறித்த மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை இணக்கத்துடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகப்படுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு போதுமான சட்டக் காரணிகள் இல்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor