
குடிவரவு குடியகழ்வு மற்றும் ஆட்பதிவு திணைக்களம் உள்ளிட்ட சில திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எனினும், பணிப்பகிஷ்கரிப்பினால் திணைக்களங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக சேவையாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழக சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.