பொலனறுவைக்கு சொகுசு ரயில்

கோட்டையிலிருந்து ​பொலன்னறுவை ரயில் நிலையம் வரையில், “புலத்திசி” என்ற பெயரில் சொகுசு ரயில் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயிலின் முதலாவது பயணமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (11) பிற்பகல் 03.05 க்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சொகுசு ரயில் சேவையானது பொல்கஹவெல, குருநாகல், மஹவ, கலாவெவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரங்கொடை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்