இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை நிர்வாக சேவைகள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹனா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களும் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 24 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன


Recommended For You

About the Author: Editor