அமெரிக்காவிற்கு தலிபான்கள் எச்சரிக்கை!!

தலிபான் போராளிகளுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையைில் தலிபான்கள் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் இயக்கம் விமர்சனம் செய்து வருகின்றது.

அத்தோடு ட்ரம்பின் இம்முடிவிற்கு அமெரிக்கா அதிகமான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் , அமைதி, சொத்து இழப்புகள் அதிகரிக்கும் என தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தலிபான் பயங்கரவாத இயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டது.

சுமார் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காபூலில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது தலிபான். இதில் 12 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பேச்சுவார்த்தையை இரத்து செய்வதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor